Türkçe

 

மறுப்பு தெரிவிக்கும் அறிவிக்கை

 

துருக்கிய கலாச்சாரத்தின் பாதுகாவலர்களாகிய – மொழிபெயர்ப்பாளர்கள், தனியார் மொழிபெயர்ப்பு நிறுவனங்கள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்களிகன் கழகங்களாகிய – நாங்கள் நவம்பர் 30, 2006 அன்று கூட்டப்பட்ட சிறப்பு கூட்டுக் கூட்டத்தின் தீர்மானத்தின்படி,  அக்டோபர் 12, 2006 அன்று, மிகப் பெரிய அளவில் பேசப்படும் ஆர்மேனியப் படுகொலையினை மறுக்கும் வகையில் உள்ள எந்த ஒரு சுதந்திரமான பேச்சினையும் குற்றமாக கருதும் வகை கொண்ட பிரெஞ்ச் பாராளுமன்றம் நிறைவேற்றிய சட்டத்தினைக் கண்டித்து  மறுக்கிறோம்.

 

இந்தச் சட்ட ஆனண ஓர் ஆபத்தான சரித்திரத் தவறாகும். எங்களுடைய நம்பிக்கைக்குரிய நண்பர்களாகக் கருதும் பிரெஞ்சுப் பெருமக்களையும், நாங்கள் வெகுவாகப் போற்றும் பிரெஞ்சுக் கலாச்சாரத்தினையும் மற்றும் பயபக்தியுடன் நாங்கள் மதிக்கும் பிரெஞ்ச் மொழியினையும் இந்தப் பிரெஞ்ச் பாராளுமன்றம் போதுமானவகையில்  பிரதிபலிக்கவில்லை என்பதனை நாங்கள் மிகுந்த வருத்தத்துடன் கவனித்திருக்கிறோம்.

 

துருக்கியர்கள் எந்த ஒரு நாடு அல்லது மொழி அல்லது பண்பாட்டிற்கு எதிரான இனக்கொலை போன்ற குற்றங்களைச் செய்யவோ அல்லது ஈடுபட்டதோ இல்லை. தற்போது இட்டுக்கட்டிக் கூறப்படுபவன எல்லாம் பொய் மற்றும் அவதூறுகளே அன்றி வேறு ஒன்றும் இல்லை; இவ்வகையில் பிரெஞ்ச் பாராளுமன்றம் மாபெரும் பிரெஞ்ச் மக்களைத் தவறாக வழி நடத்துகிறது. நாங்கள் பிரெஞ்ச் மக்களை அவர்கள் விரும்பும் வகையில் எங்களுடன் இணைந்து வந்து துருக்கிய ஓட்டோமன் ஆவணக் காப்பகங்களில் நேரத்தைச் செலவழிக்கவும் தெளிவான சாட்சியங்களைக் காணவும் அன்புடன் அழைக்கிறோம்.  இனப் படுகொலைகளின் கடுமையான விளைவுகளிலிருந்து மற்ற மக்களையும் நாடுகளையும் காப்பாற்றுவதில் கருவியாக இருந்த  மிகப் புகழ்பெற்ற பெருமை வாய்ந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் துருக்கியர்கள்.  சரித்திரத்தில் இந்த உண்மை மிகச் சரியாகப் பதிவு பெற்றுள்ளது.

 

குருட்டுத்தனமாக அழுத்தமாகத் திணிக்கப்படும் பிரெஞ்ச் பாராளுமன்றத்தின் இந்தத் தவறான முடிவு துருக்கிய நாட்டுக்கு எதிராக ஒரு கலாச்சார இனப் படுகொலை நிலைக்குச் சென்றுள்ளது.  இதனை மறுபரிசீலனை செய்திடவும் மனித இனத்தின் மிக மோசமான இந்த குற்றத்தினை மேற்கொள்ளாமல் இருக்கவும் பொறுப்புள்ள மற்றும் சட்டக் கடப்பாடுடைய பிரெஞ்ச் அதிகாரிகளை நாங்கள் அழைக்கிறோம்.  இத்தகைய நிகழ்வுகள் தொடர்வதாக இருந்தால், பல பரிமாணங்கள் கொண்ட துருக்கிய – பிரெஞ்ச் நட்புறவுகளில் நாங்கள் மேற்கொண்டுள்ள மிக முக்கியமான பணித் திட்டங்களுக்குள்ளாக மேலும் பல முன்னெச்சரிக்கைகளை எடுக்கும் எங்கள் உரிமைகளை பயன் நோக்கி ஒதுக்கி வைப்போம் என்பதனை மனதில் கொள்ள வேண்டும். 

 

மாபெரும் பிரெஞ்ச் மக்கள் மற்றும் உலகத்திற்கு இதனை மரியாதையுடன் தெரியப்படுத்துவதை  இரு கலாச்சாரங்களுக்கு இடையிலான முதன்மைத் தொடர்பு என்கிற முறையில்  எங்கள் கடமை என்று நாங்கள் கருதுகிறோம்.

 

துருக்கிய மொழி மொழிபெயர்ப்பாளர்கள

(a note from history)

Azərbaycanca
Қазақша
English
Deutsch
Español
Italiano
Nederlands
Svenska
Romănă
Eesti
Русский
עברית
العربية
தமிழ்
简体中文
हिंदी
ગુજરાત
Français
More languages
Credits
Signatures